ஒரு பாகிஸ்தான் மக்களை கூட கொல்லல.. கவனமாக செயல்பட்டோம்! - இந்திய ராணுவம் விளக்கம்!

Prasanth Karthick

புதன், 7 மே 2025 (12:05 IST)

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

 

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், 9 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமை குறி வைத்து நேற்று இரவு தாக்கி தரைமட்டமாக்கியது. இதில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள், இந்திய ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொன்றுள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்து வருகிறது.

 

அதில் ஆபரேஷன் சிந்தூரில் செயல்பட்ட கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் “பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்களுக்கு தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலில் ஒரு பாகிஸ்தான் பொதுமக்கள் கூட கொல்லப்படவில்லை. குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்