பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா

Mahendran

புதன், 7 மே 2025 (10:51 IST)
இந்திய ராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இது தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "நமது ஆயுதப்படைகளை பற்றி பெருமைப்படுகிறோம். பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலேயே ஒழிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் இந்திய மக்கள்மீது எந்த ஒரு தாக்குதலுக்கும் எங்கள் அரசு பதிலடி கொடுக்கும்," என தெரிவித்துள்ளார்.
 
இதுவரை இந்தியா–பாகிஸ்தான்  ராணுவத்தினர் இடையே மட்டுமே சண்டை நடைபெற்றது. ஆனால், முதன்முறையாக பாகிஸ்தான், அப்பாவி இந்திய மக்களை சுட்டுக் கொன்றது ஒரு மிகப்பெரிய தவறு. இந்த தவறுக்கு நிச்சயம் மிகப்பெரிய பழிவாங்கல் நடைபெறும் என்றே கூறப்பட்டது.
 
அந்த நிலையில் தான் தற்போது இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்