ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி , ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
முன்னே போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தியும் ராகுல் காந்தியை பிரதமர் மோடியும் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ் இளவரசரை தான் இந்தியாவின் பிரதமராக விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தானை பின்பற்றுவதாக இதிலிருந்து தெரிய வருகிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி இங்கே வீழ்ச்சி அடைந்து வருகிறது என்றும் எனவே பாகிஸ்தான் அங்கே அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.