ப்ளாக் மார்கெட்டில் எகிறிய ஆக்சிஜன் & ரெம்டிசிவர் விற்பனை!

Webdunia
சனி, 15 மே 2021 (10:38 IST)
ஆக்சிஜன், ரெம்டிசிவரின் விற்பனை அதிக விலைக்கு வந்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த சூழலை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் ஆக்சிஜன், ரெம்டிசிவரின் விற்பனை அதிக விலைக்கு வந்துள்ளது. ஆம், ஒரு குப்பி ரெம்டிசிவர் ரூ.50,000 வரை விற்கபடுவதாகவும், ஆக்சிஜன் சிலிண்டர் ரூ.40,000-த்திற்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய மருந்து தரக் கட்டுபாட்டு ஆணையம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்