கொடூர கொரோனா: விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் பலி!

சனி, 15 மே 2021 (08:55 IST)
விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. 

 
விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப்பிற்கு கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 
 
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், விசிக மாநில பொருளாளர் மு முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீர வணக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்