பயணிக்கு 9 லட்சம் பில் போட்ட ஓலா கால் டாக்சி

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (20:17 IST)
பிரபல கால் டாக்சி சேவை நிறுவனம் ஓலா கால் டாக்சியில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு 9 லட்சம் பில் வந்துள்ளது. இதைக்கண்டு பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த ரதீஷ் சேகர் என்பவர், ஓலா டாக்சியில் பயணம் செய்துள்ளார். காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை 450 கி.மீ.தூரம் பயணித்துள்ளார்.

இதற்காக ரூ.9.15 லட்சத்துக்கு ஓலா பில் போட, காரை ஓட்டிவந்த டிரைவரே அதிர்ச்சி அடைந்தார். பயணியும் அதிர்ச்சி அடைந்து ஓலா நிறுவனத்துக்கு தொடர்ப்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அரை மணி நேரம் கழித்து ரு.4,812 என பில் வந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்