உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சட்டத்தை அமல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், பொது சிவில் சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை அமல்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடிவடைந்தது என்றும், இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவது உறுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை அடுத்து வேறு சில மாநிலங்களும் விரைவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட சில மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் தெரிந்ததே.