ஜெயலலிதா படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம்

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (19:42 IST)
காவிரியை தமிழகத்திற்கு திறந்து விட கோரி கர்நாடகவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் விவசாயிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா விவசாயிகள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தகூடாது என மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மைசூர் மாண்டியா விவசாயிகள் ஜெயலலிதா படத்தை எரித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக எல்லை பகுதியில் பாதுகாப்பு கருதி தமிழக பஸ்கள் ஒசூர், சத்தியமங்கலம் பகுதியில் நிறுத்தபட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்