செக் மோசடி வழக்கு: முன்னாள் முதல்வர் மகனுக்கு 6 மாதம் சிறை

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:40 IST)
ஆந்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகன் நந்தமுரி ஜெயகிருஷ்ணாவுக்கு ஐதராபாத் நீதிமன்றம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
என்.டி.ராமராவ் அவர்களின் எட்டு மகன்களில் ஒருவரான நந்தமுரி ஜெயகிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா திரையரங்கத்தின் பார்க்கிங் மற்றும் கேண்டின் லீஸ் உரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த செக் ஒன்று போதிய பணமில்லாமல் திரும்பிவிட்டது.
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜெயகிருஷ்ணாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயகிருஷ்ணாவின் மைத்துனர் தான் தற்போதைய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு ரெட்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்