1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்ட நபர்

புதன், 6 செப்டம்பர் 2017 (15:08 IST)
கேரளாவில் நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொண்ட நபர் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு ரூ.5001 பரிசு பெற்று அசத்தியுள்ளார்.


 

 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. உள்ளூர் கிளப் ஒன்றில் சோறு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதாவது 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும்.
 
இந்த போட்டியில் பலரும் கலந்துக்கொண்டனர். நசீர் என்பவர் 30 நிமிடங்களில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிசாக ரூ.5001 வழங்கப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்