குடிபோதையில் சாலை விதிகளை மீறுவோர் மீதான தண்டனை மற்றும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை அபராதம், லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் அபாரதம் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், வாகன விபத்திற்கான இழப்பீடு தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல், வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கும் மசோதாவிற்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.