ஆட்சி அதிகாரத்தை வைத்து விஜய்யை பயமுறுத்த முடியாது! - நடிகர் சௌந்தரராஜா!

Prasanth Karthick

ஞாயிறு, 2 மார்ச் 2025 (10:32 IST)

மக்களுக்கான பணிகளை முன்னிறுத்தி தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் நின்றுக் கொண்டிருப்பதாக நடிகர் சௌந்தரராஜா பேசியுள்ளார்.

 

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளராக இருந்து வருபவர் நடிகர் சௌந்தரராஜா. இவருக்கு கட்சியில் பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாவிட்டாலும் தொடர்ந்து தவெகவிற்காக பேசி வருகிறார். 

 

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பெருமாள் கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர் பேசிய அவர் “மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக இந்த மண்ணுக்கு தேவையான ஒரு ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தவெக தலைவர் விஜய் கையில் எடுத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி கட்சியினர் சீட்டுக்காக காத்திருக்கின்றனர். சீட் கிடைக்கவில்லை என்றால் நல்லவர்கள் எங்களை தேடி வருவார்கள்.

 

நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஆனாலும் எங்கள் மீது குற்றம் சுமத்த காரணம் என்ன? எங்களை அச்சுறுத்துவீர்கள், அவமானம் செய்வீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயம் காட்டுவீர்கள். இதெல்லாம் விஜய் அண்ணனிடம் பலிக்காது” என்றுக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்