நடுகடலில் மிதக்கும் இது என்ன தெரியுமா???

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (11:45 IST)
விசித்திரமான தோற்றத்துடன் நடுகடலில் மிதந்த பொருள் ஒன்று மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தது.




மேற்கு ஆஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதலில் படகு என்றும், பின்னர் மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன் என்றும் நினைத்து அருகே சென்றனர். நெருங்க நெருங்க அதன் உருவத்தைக் கண்டு வேற்றுக்கிரகப் பொருளாக இருக்கலாம் என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பின்னர் மிக அருகில் சென்றவுடன் அது ஒரு இறந்த திமிங்கலம் என்பதை உணர்ந்தனர். திமிங்கலத்தின் வயிறு முழுவதும் வாயுவால் நிறைந்து இருந்ததால், அது பந்து போல் உப்பலாக காட்சி அளித்தது என்றும், அருகே செல்ல அது ஒரு இறந்த திமிங்கிலம் என்று அதன் துர்நாற்றத்தை வைத்து உணர்ந்தோம் என்று மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்