8 கிலோ மீட்டருக்கு எதுவும் மிஞ்சல.. ஒரு ராத்திரியில் கோர தாண்டவம்! - இஸ்ரோ வெளியிட்ட நிலச்சரிவு மாதிரி படம்!

Prasanth Karthick
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (09:16 IST)

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ள நிலையில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களையும், மாதிரி படத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

 

 

கனமழை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி முண்டக்கை, சூரல்மலை, ஆட்டமலா, நூல்புழா ஆகிய பகுதிகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 200 மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

 

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முயன்றபோது கேரள அரசு தலைமைச் செயலாளர் நேற்று அதற்கு தடை விதித்தார். எனினும் இதில் முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு அந்த தடையை நீக்கி, விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய அனுமதியளித்தார்.

 

இந்நிலையில் தற்போது நிலச்சரிவின் பாதிப்புகள் குறித்த மாதிரி புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு அதன் ஆரம்ப புள்ளியில் தொடங்கி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சரிந்து வந்திருக்கிறது. இதில் அப்பகுதி கிராமங்கள் பலவும் நிலச்சரிவில் மண்ணில் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக 86 ஆயிரம் சதுர அடி பரப்பளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

ஒரே இரவில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தை மூடிய இந்த பெரும் நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்