சாலியாற்றில் அதிக சடலங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், நிலச்சரிவில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மனிதர்கள் மட்டுமின்றி, ஏராளமான விலங்குகளும் பேரிடரில் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றை எல்லாம் முறையாக புதைக்க வேண்டும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும் என்று பினராயி விஜயன் கூறினார்.