’ஜெயலலிதா உடல்நலக்குறைவு எதிரோலி’: அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மரணம்!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (11:15 IST)
முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.


 


இதை அடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் பட்டுக்கோட்டை நகர 11வது வார்டு அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தவர். அவரது உடலுக்கு அதிமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அடுத்த கட்டுரையில்