மதுரா உள்ளிட்ட 7 ஊர்களில் மாமிசம் மற்றும் மதுவுக்குத் தடை! யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:56 IST)
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் இனிமேல் மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த கிருஷ்ண ஜெயந்தியில் கலந்துகொள்ள அங்கு வந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுராவில் மாமிசம் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதில் மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகிய பகுதிகள் அடங்கும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்