காப்பி பேஸ்ட் வேண்டாம், சொந்த புத்தியை பயன்படுத்துங்கள்: நீதிமன்றம் கண்டனம்

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (21:22 IST)
இந்தியாவின் புவியியல் அமைப்புக்களைப் பயன்படுத்தி மொபைல் போன்களுக்கு மல்டிமீடியா மற்றும் தகவல்களை வழங்கும் உரிமை தேவாஸ் மல்டிமீடியாஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இஸ்ரோவிடம் இருந்து பெற்றிருந்தது.

ஆனால் இந்த விஷயத்தில் சட்ட விதிகள் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு தேவாஸ் மல்டிமீடியா மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு தொடர்ந்தது

இந்த நிலையில் அமலாக்கப்பிரிவும் தேவதாஸ் நிறுவனம் மீது பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டி இந்நிறுவனத்திற்கு சொந்தமான 79 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டது. அமலாக்கப்பிரிவின் இந்த உத்தரவை எதிர்த்து தேவாஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் என்ன இருந்தோ, அதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் இருந்ததை கண்டுபிடித்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோன்ற முக்கிய வழக்குகளில் காப்பி, பேஸ்ட் செய்ய வேண்டாம் என்றும், சொந்த புத்தியைப் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டு அமலாக்கத்துறைக்கு மேலும் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்