ராபர்ட் வதேரா லண்டனில்17 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கிய சொத்து ஒன்றில் சுமார் பணமோசடியில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் அவர் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது அமலாக்கத்துறை.
இது தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அதில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘ ராபர்ட் வதேரா வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்’ என வாதிட்டது. இதை எதிர்த்து வதேராவின் வழக்கறிஞர் ‘ அமலாக்கத்துறை அழைத்தபோதெல்லாம் அவர் சென்றுள்ளார். அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளாதது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காதது என்று அர்த்தமில்லை. ’ எனக் கூறப்பட்டது.