சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: பீகார் முதல்வர் கொண்டு வருகிறார்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
பீகார் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக கூட்டணியின் தயவில் ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்போது எதிர்க்கட்சிகலின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து வருகிறார்
 
இதனை அடுத்து நிதிஷ்குமார் முதலமைச்சராகவும் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் சமீபத்தில் பதவியேற்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தபோது பீகார் சட்டமன்ற சபாநாயகராக விஜயகுமார் சின்ஹா என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்
 
தற்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ்குமார் அரசு பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜயகுமார் சின்ஹாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். இந்த தீர்மானம் வரும் 24ஆம் தேதி வாக்கெடுப்புக்கு வர உள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பின்னரும் அக்கட்சியை சேர்ந்த சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாததால் முதல்வர் நிதிஷ்குமார் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்