யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

Siva

புதன், 21 மே 2025 (12:53 IST)
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா, தேசத்துக்கு எதிரான செயல்களை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருடைய வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற ஜோதி மல்கோத்ரா, இந்திய ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் கூறியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், அவருடைய வீட்டை சோதனை செய்த போது ஒரு டைரி சிக்கியதாகவும், அதில் சில திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, "Love you" என்ற வார்த்தைகள் எழுதியிருப்பதாகவும், அதுமட்டுமின்றி "பாகிஸ்தான் மிகவும் கலர்ஃபுல்லான நாடு" என்று அவர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பது தெரிய வந்துள்ளதாகவும், அவரிடம் நடைபெறும் விசாரணைகளில் இன்னும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்