காண்டம் விளம்பரத்திற்கு திடீர் கட்டுப்பாடு: தொலைக்காட்சி சேனல்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (13:24 IST)
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் காண்டம் விளம்பரத்திற்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திடீர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் வருமானம் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என தொலைக்காட்சி சேனல்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் காண்டம் விளம்பரம் தொடர்ப்பாக வந்த பல புகார்களின் அடிப்படையில் ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி தொலைக்காட்சி சேனல்கள் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. எனவே இரவு பத்து மணியில் இருந்து காலை ஆறு மணி வரை மட்டுமே இந்த விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஸ்மிரிதி இரானி தலைமையிலான மத்திய தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சகம் இதை ஒரு உத்தரவாக பிறப்பிக்காமல் வளரும் குழந்தைகளின் நலனை முன்னிட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரு வேண்டுகோளாக மட்டுமே முன்வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்