ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் 15 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் 120 மாணவ மாணவிகள் ஆஸ்திரேயாவிற்கு சென்றனர். போட்டிகள் நிறைவடைந்த பின், ஊரை சுற்றிபார்க்க முடிவெடுத்த மாணவிகள் அங்குள்ள கடற்கரைக்குப் சென்றனர். தண்ணீரில் குளிக்க சென்ற மாணவிகள் 5 பேர் கடல் திடீரென அலைகளில் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் 4 பேரை பத்திரமாக மீட்டனர், எனினும் டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான நிதிஷா நேகி(15) யை சடலமாக தான் மீட்கமுடிந்தது.