முதல்வர் பதவியேற்றவுடன் நிதிஷ்குமார் அதிரடி.. சபாநாயகரை நீக்க கோரி நோட்டீஸ்

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (11:25 IST)
நேற்று காலை பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பதவியேற்றார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் முதல்வர் பதவியை ஏற்றவுடன் அவர் சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சபாநாயகர் ஆக இருப்பவர் லாலு பிரசாத் கட்சியின் ஆவாத் பிகாரி சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது பாரதிய ஜனதா மற்றும் நிதிஷ்குமார் கட்சி  கூட்டணிக்கு 128 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில்  சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால்  அந்த தீர்மானம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.  

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளுக்கு 114 எம் எல் ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் 128 எம்எல்ஏக்கள் பாஜக நிதிஷ்குமார் கூட்டணிக்கு உள்ளது. எனவே 14 எம்.எல்.ஏக்கள் அதிகம் ஆதரவிருப்பதால் சபாநாயகரை நீக்கும் தீர்மானம் வெற்றி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சபாநாயகர் நாற்காலியில் தனக்கு எதிரானவர் உட்கார்ந்து இருந்தால்  பெரும் பிரச்சனை ஏற்படும் என்பதால் நிதிஷ்குமார் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்