இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார்? திமுக ஏற்று கொள்ளுமா?

Siva
வியாழன், 4 ஜனவரி 2024 (13:20 IST)
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமார் இன்று அறிவிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாஜகவை தோற்கடிக்க இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியின் நான்காவது கூட்டான் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. 
 
இந்த நிலையில் இன்று காணொளி மூலம் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய இருப்பதாகவும் இந்த காணொளி கூட்டத்தில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. 
 
மேலும் இந்த கூட்டத்தின் முடிவேல் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமாரை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிதிஷ்குமார் திமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில் இந்த முடிவுக்கு திமுக ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  
 
மேலும் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்