நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அடுத்த பட்ஜெட் எப்போது? புதிய தகவல்..!

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (11:13 IST)
மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்று கொண்ட நிலையில் அவரது புதிய பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பாஜக அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்த நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு மார்ச் மாதம் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் மீண்டும் அவர் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 
 
தொழில்துறை, வேளாண்துறை, வர்த்தக துறையுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் அதன் பிறகு ஜூலை 22ஆம் தேதி புதிய அரசின் முதல் முழு பட்ஜெட் தாக்கல் ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
 
ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை நாடாளுமன்ற கூட்டத்துடன் நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்டமாக சபாநாயகர் தேர்வு மற்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு நடைபெற உள்ளது. அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் மானிய கோரிக்கை மீதான விவாதமும் இந்த கூட்டத்தொடரில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக வரும் 18ஆம் தேதி முதல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்