பட்ஜெட்டை சொல்லி தயாரிப்பாளரை ஷாக் ஆக்கிய மோகன் ராஜா… தனி ஒருவன் 2 தள்ளி வைப்பா?

வெள்ளி, 24 மே 2024 (09:42 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம். இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடந்த போது படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்று இயக்குனர் மோகன் ராஜா அறிவித்தாராம். இதைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகிவிட்டதாம். ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோரின் தற்போதைய மார்க்கெட்டின் படி இந்த தொகையில் படம் எடுத்தால் கண்டிப்பாக மிகப்பெரிய நஷ்டம் வரும் என்பதால் இப்போதைக்கு படத்தை தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்