திருமணமான சில நாட்களில் இறந்த மணமகள்…. சோகத்தில் உறைந்த திருமண வீடு!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (10:30 IST)
ஒடிசாவில் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு செல்ல இருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குப்தேஸ்வரி சாஹூ என்கிற ரோஸி என்பவருக்கும் பிசிகேசன் பிரதன் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் ஆகியுள்ளது. இதையடுத்து மணமக்கள் இருவரும் மணமகள் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளனர். விருந்து முடிந்து மீண்டும் கணவர் வீட்டுக்குக் கிளம்பும்போது குடும்பத்தினரை பிரிய மனம் இல்லாமல் ரோஸி அழ ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக அதிர்சியான செய்தியை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ரோஸியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர்தான் ரோஸியின் தந்தை காலமாகியுள்ளார். அதில் இருந்தே ரோஸி சோகமாகவே இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்