நடுத்தர மக்களுக்காக புதிய குடியிருப்பு திட்டம்..! 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு..!! நிர்மலா சீதாராமன்.!!

Senthil Velan
வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:52 IST)
நடுத்தர மக்களுக்காக புதிய குடியிருப்பு திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் பற்றி செய்தியாளரிடம் பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். 
 
நடுத்தர மக்களுக்காக புதிய குடியிருப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் 4  கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் பண வீக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 

ALSO READ: குப்பைக்கு விருது - கோவை முதலிடம் பிடிக்கும்..! அதிமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்..!!
 
லட்சத்தீவு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்த நிதி அமைச்சர், செலவினங்களை குறைத்து நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்