மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
எரிபொருட்களின் விலை பத்து ரூபாய் வரை குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று தாக்கலான பட்ஜெட்டில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.