நீட் தேர்வுக்கான வினாத்தாள் 2 மணி நேரத்திற்கு முன்பு தான் தயாரிக்கப்படும்: மத்திய அரசு

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (15:51 IST)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்பட முறைகேடுகளை தடுப்பதற்காக இனிமேல் நீட் தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
சமீப காலமாக நீட் தேர்வு நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும் குறிப்பாக வினாத்தாள் முன்பே கசிந்து லட்சக்கணக்கில் அந்த வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 
 
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்கால டெக்னாலஜியில் முறைகேடுகளை தடுப்பது கடினம் என்பதால் தற்போது மத்திய அரசு புதிய அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. 
 
இதன்படி நீட் தேர்வு நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்றும் அதன் பின்னர் ஆன்லைனில் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாத்தாள் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்