பள்ளி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் வகுப்பு: தேச பக்தியை வளர்க்க என்சிஇஆர்டி பரிந்துரை..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (07:53 IST)
பள்ளி மாணவர்களுக்கு தேசபக்தியை வளர்க்க இராமாயணம், மகாபாரதம் வகுப்பு நடத்த என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதற்கு அவர்களுக்கு தேசப்பற்று இல்லாததே காரணம். எனவே பள்ளி மாணவர்களுக்கு ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் சேர்த்து, தேச பக்தியை வளர்க்க என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது.

மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை, தேச பக்தி, தேசத்தின் பெருமை ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்காக ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சேர்த்து மாணவர்களுக்கு கற்பிக்க என்சிஇஆர்டி குழு வலியுறுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடன் நம் நாட்டிலேயே வேலை செய்வார்கள் என்றும் வெளிநாட்டுக்கு செல்லும் எண்ணத்தை விட்டு விடுவார்கள் என்றும் கூறப்படும் கூறப்பட்டுள்ளது

 ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பதால் அனைவரும் தேச பக்தி வளர்த்துக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்