அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

Siva

ஞாயிறு, 4 மே 2025 (07:11 IST)
அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் சில தகவல்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா–பாகிஸ்தான் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தியாவின் முக்கிய மத வழிபாட்டுத்தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த சூழலில், அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக நடந்ததையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். மகாராஷ்டிராவிலிருந்து அவர் அயோத்திக்கு வந்ததாக கூறப்படுகிறது.
 
மேலும், அந்த பெண் தலை மற்றும் முகத்தை நீல துணியால் மூடியிருந்ததாலும் சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, அவர் பாதுகாப்புப் பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும், அதனையடுத்து கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், அவர் மனநிலையால் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்