12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva

வியாழன், 1 மே 2025 (18:49 IST)
12 வயது இந்து மத சிறுமியை 73 வயது முஸ்லிம் நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த சிறுமியின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நைனிடால் என்ற பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது 73 வயது முகமது உஸ்மான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்த நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள இந்து மக்கள் வன்முறையில் இறங்கியதாகவும் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கியதாகவும் இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்தவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
இந்த நிலையில் 73 வயது முகமது உஸ்மான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் அந்த பகுதியில் தற்போது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிலைமையை இயல்பு நிலைக்கு மாற்ற போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்