வாழைப்பழ தோலை வைத்து செய்த சதி: ரயில் சேவை பாதிப்பு!!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (16:35 IST)
உள்ளூர் ரயில் சேவையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் நகரம் மும்பை. ஆனால், மும்பையில் வாழைப்பழ தோல் ஒன்றினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது.


 
 
ரயில் நிலையங்களில் இருக்கும் நடை மேம்பாளத்தில் இருந்து பயணி ஒருவர் வாழைப்பழத்தை உண்டு தோலை கீழே தூக்கி எறிந்துள்ளார்.
 
அந்த தோல் கீழே விழாமல், மின்சார கம்பியில் விழுந்து தீப்பொறி சிதறி அந்த மின்சார கம்பியின் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்வே சேவை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
அடுத்த கட்டுரையில்