பல இடங்களில் குடியுருப்பு பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டாதீர், விளம்பரம் செய்யாதீர் போன்ற அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் மும்பையின் போரிவலி பகுதியில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்றுள்ள வாசகம் வைரலாகியுள்ளது.
அந்த குடியிருப்பின் அருகே மாலை நேரத்தில் கூடும் காதலர்கள் சிலர் இருட்ட தொடங்கியதும் அப்பகுதியில் நின்று முத்தமிட்டு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்கள். குடியிருப்பு அருகே இவ்வாறு தொடர்வதை தடுக்க நினைத்த குடியிருப்புவாசிகள் பார்க்கிங் பகுதியில் “இங்கு முத்தமிட அனுமதி இல்லை” என எழுதியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.