நான் மோடிஜிக்கு நமஸ்காரம் செய்கிறேன்.. நேபாளத்தில் பொறுப்பேற்க உள்ள சுசிலா பேட்டி..!

Siva

வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:19 IST)
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, அந்நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அவர் பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். "நான் மோடி ஜிக்கு நமஸ்காரம் செய்கிறேன். மோடி ஜி குறித்து எனக்கு மிகவும் நல்ல அபிப்ராயம் உண்டு," என்று கூறியுள்ளார்.
 
நேபாளத்தில் ஜென்-இசட்" தலைமுறை இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதனையடுத்து நேபாளத்தின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்கும் சுசிலா கார்க்கி, "நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். நேபாளத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சிப்போம்," என்று உறுதி அளித்தார்.
 
பிரதமர் ஒலியின் ராஜினாமாவுக்கு பிறகு, தலைநகரில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000க்கு மேலாகவும் அதிகரித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்