சென்னையின் 60 ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுக்கள்.. சூப்பர் அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:13 IST)
தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளை அமைத்து வருகிறது. இந்த மேம்பாட்டுப் பணிகள் குறித்த தகவல்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
 
இதன்படி  எண்ணூர், மீஞ்சூர், ஆவடி, ஆம்பூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் 60 புதிய மின்தூக்கிகள் அமைக்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் இதன் மூலம் பயன் பெறுவர்
 
அதேபோல் எழும்பூர் ரயில் நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை தொடர்ந்து, 40 மின்தூக்கிகளும் 31 நகரும் படிக்கட்டுகளும் நிறுவப்பட உள்ளன.
 
தாம்பரம், மாம்பலம், ஆவடி, கிண்டி: தாம்பரத்தில் 9 மின்தூக்கிகளும், 10 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படவுள்ளன. மாம்பலம், ஆவடி, மற்றும் கிண்டி ரயில் நிலையங்களிலும் புதிய நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்படுகின்றன.
 
இதன் மூலம் ரயில்வே சேவை மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்