விஜய் பாடல் நிகழ்த்திய சாதனை...ரசிகர்கள் மகிழ்ச்சி

சனி, 31 ஜூலை 2021 (23:11 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் கத்தி  படப் பாடல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  , விஜய் நடிப்பில் , அனிருத் இசையமைப்பில் உருவான படம் கத்தி. இப் படத்தில் இடம்பெற்ற செல்ஃபி புள்ள என்ற பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலை விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்