விடுதலை சிறுத்தைகள் மீது காண்டில் தேவர் அமைப்பினர் !

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (13:55 IST)
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு புகைப்படத்தை எரித்து தேவர் அமைப்பினர் போராட்டம். 

 
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசி, தென் மாவட்டங்களில் சாதி கலவரம் உண்டாக்கும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னியரசை கண்டித்து மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பில் வன்னியரசின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்