ஜம்மு காஷ்மீரில் வெற்றி கிடைத்தாலும் ஆட்சி அமைக்க வேண்டாம்: இந்தியா கூட்டணிக்கு எம்பி வேண்டுகோள்

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (17:35 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க வேண்டாம் என்றும், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடாது என்றும் எம்.பி. ரஷீத் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது, "இந்தியா கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பிற கட்சிகள் இணைந்து ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெறும்" என்பது கருத்துக்கணிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. ஆனாலும், மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏதாவது ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும், மற்ற அனைத்து கட்சிகளும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அந்தஸ்தை மீட்டெடுத்து, அதன் பின் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு தர எங்களது அவாமி இத்தேஹாத் கட்சி கட்சி தயாராக உள்ளது என்றும், அந்தக் கட்சியின் எம்.பி. ரஷீத் தெரிவித்துள்ளார். அவரது கருத்தை இந்தியா கூட்டணி ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்