ஸ்மிருதி இராணியை ஆபாசமாக விமர்சித்த எம்.பி

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (15:22 IST)
மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்க மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஸ்மிருதி இராணி.


 
 
இரண்டு வருடங்களுக்கு பின்னர் தற்போது முதல் முறையாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இதில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரகாஷ் ஜவடேகரிடம் அந்த துறை ஒப்படைக்கப்பட்டது.
 
ஸ்மிருதி இராணி ஜவுளித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை வைத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஐக்கிய ஜனதாதள எம்.பி., அலி அன்வர் ஆபாசமாக விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அமைச்சரவை மாற்றம் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதாதள எம்.பி., அலி அன்வர் ஜவுளித்துறை ஸ்மிருதி இராணிக்கு ஒதுக்கியது அவரது உடலை மூட உதவும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜ்யசபா எம்.பி. ஒருவரே பெண் மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரை இப்படி ஆபாசமாக விமர்சித்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்