1000 அடி உயரத்தில் சறுக்கி விளையாட வேண்டுமா? (வீடியோ)

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (15:18 IST)
அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட 1000 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் கண்டாடி சறுக்குப் பாதை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் சறுக்கி விளையாடுகின்றனர்.


 

 
 
 
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட ஆயிரம் அடி உயர வானளாவிய கட்டிடத்தில் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக மேல் இருந்து கீழ்நோக்கி வரும் வகையில் சறுக்குப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 
 
இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்குப் பாதை தற்போது, மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் முன்னோட்டமாக சறுக்கி விளையாடுகின்றனர்.
 

நன்றி: NewYork Magazine
 
அடுத்த கட்டுரையில்