ஒரே நாளில் 12,000ஐக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (10:23 IST)
நேற்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 2000 பேர் அதிகரித்து 12 ஆயிரத்துக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,591  என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 63,562  என்ற இருந்த நிலையில் இன்று 65286 என்ற அதிகாரித்துள்ளது. 
 
மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  10,827  பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்ததால்தான் கொரோனா பாதிப்பு குறையும் என கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்