மக்கள் தொகை குறைந்தாலும் எங்களிடம் தான் திறமையானவர்கள் அதிகம்: சீனா

வியாழன், 20 ஏப்ரல் 2023 (07:58 IST)
ஐநா நேற்று வெளியீட்டுள்ள அறிக்கையின்படி இந்த ஆண்டு சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என்றும் இந்திய மக்கள் தொகையை 142.86 கோடியாக இருக்கும் என்றும் ஆனால் சீன மக்கள் தொகை 142.57 கோடியாக தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மக்கள் தொகை பங்களிப்பு என்பது எண்ணிக்கையை சார்ந்தது அல்ல என்றும் அதை தரத்தை சார்ந்தது என்றும் தெரிவித்தார். 
 
மக்கள் தொகை எண்ணிக்கை முக்கியம் என்றாலும் மக்களிடம் உள்ள திறமையும் மிகவும் முக்கியம் என்றும் சீனாவின் மக்கள் தொகை 140 கோடியை தாண்டி இருந்த போதிலும் தரமான பணியாளர்கள் 90 கோடி பேர் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவை விட சீனாவில் மக்கள் தொகை குறைந்தாலும் இந்தியாவை விட அதிக திறமையானவர்கள் சீனாவில் தான் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்