சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் தல தோனி! அவரே கூறிய விளக்கம்!

புதன், 19 ஏப்ரல் 2023 (17:30 IST)
கபாலி படத்தில் நடிகர் ரஜினி அமர்ந்திருப்பது போல் தோனி அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. மூன்று வகை கோப்பைகளையும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்தவர் ஆவார்.

தற்போது, ஐபிஎல் 16 வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ச் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில், ரஜினி- பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் கபாலி. இப்படத்தில் ரஜினி  நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

இதே மாதிரி தோனியும் ஒரு புகைப்படத்தை தோனி தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இது வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து தோனி கூறியதாவது: ‘’ஒரு சிறந்த மனிதரின் போஸை காப்பி செய்ய முயன்றேன்.  அவரைப் போல் யோசிப்பது , செயல்படுவது என்பது கடினம். அதனால், அவரது போஸையாவது காப்பி செய்தேன் ‘’என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்