உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 20 குரங்குகள்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:45 IST)
கர்நாடகா மாநிலத்தில் கோலார் பகுதிக்கு அருகே சுமார் 20 குரங்குகள் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் சாலையோரத்தில் கிடந்த ஒரு பெரிய சாக்குப்பையில் 20 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்துள்ளன. இதை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து உடல்களைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் உணவில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த சம்பவமானது சமூகவலைதளம் மூலமாக பரவி பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்