மோடி ’டீ விற்ற கடைக்கு ’ எகிறிய மவுசு ...மத்திய அமைச்சகம் புதிய திட்டம் !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (16:57 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று,பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பிறகு பல அதிரடியான முடிவுகளை அவர்  எடுத்துவருகிறார். 
அவர் தலைமையின் கீழுள்ள மத்திய அமைச்சர்களும் பல முக்கிய முடிவுகளை எடுத்துவருகின்றனர். 
 
இந்நிலையில் பிரதமர் மோடி அரசியலுக்கு வருவதற்கு முன்னர், குஜராத்தின் வத்நகர் பகுதியில்  தன் தந்தை நடத்திவந்த டீ கடையில் விற்பனை செய்து கடையை கவனித்து வந்தார். பிரதமராகப் பதவியேற்ற பின்னும் அவர் இதை பல இடங்களில் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஜலாத் சிங் படேல், அண்மையில் மோடியில் கடைக்குச் சென்று அப்பகுதியைப் பார்த்தார். அதன்பின்னர் இந்தக் கடையை சுற்றுலாத்தளமாக மாற்ற முடிவுசெய்துள்ளதாகவும், இதை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்து கண்ணாடியால் மூடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்