மோடி அரசே கோமாளித்தனத்தை நிறுத்து: அடித்து ஆடும் எதிர்க்கட்சிகள்!

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (13:39 IST)
இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் அவர் கடும் கோபத்தில் தனது உரையை தொடர்ந்தார்.
 
இந்த வருடத்தின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
 
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் மோடி அரசே கோமாளித்தனத்தை நிறுத்து, சர்க்கஸ் வித்தைகளை நிறுத்து, மோடி அரசே பொய்களை நிறுத்து, போலி வாக்குறுதிகளை நிறுத்து என ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர்.
 
இந்த சூழலில் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை நிறுத்தாமல் கோபமாக தொடர்ந்தார். மிகவும் உரத்த குரலில் பேசிய பிரதமர் மோடியின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்