மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (16:06 IST)
பிரதமர் மோடி குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பெருமையாக கூறிய நிலையில் அதற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதில் அளித்துள்ளார். 
 
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பதிவுக்கு ’மக்களுடன் இணைந்து இருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறென்றும் இல்லை’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நடிகை ராஷ்மிகாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள இந்த பதில் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
முன்னதாக நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூறிய ராஷ்மிகா, அடல்சேது என்ற பாலம் காரணமாக  பயண நேரம் குறைந்துள்ளது என்றும், இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? 
 
கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளதாக கூறிய ராஷ்மிகா, இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. 
 
இந்தியா ஸ்மார்ட்டான நாடு, இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு,  இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது,, அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
 
Edited by Mahendran
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்